இலங்கையின் உள்நாட்டு மோதல் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் -ஹம்சி குணரட்ணம்

182 0

இலங்கையின் உள்நாட்டு மோதல் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் ஐநா சர்வதேச சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹம்சி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

தமிழ்சிங்கள பத்திரிகையாளர்களுடான டிஜிட்டல் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.

உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் சி;ங்கள பத்திரிகையாளர்களுடன் டிஜிட்டல் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தேன்.

நோர்வே நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டமையே இதற்கு காரணம் .

நான் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமை பலருக்கு பெரும் விடயம் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இதேவேளை நான் குரல்கொடுக்கின்ற – நான் எதற்காக நாடாளுமன்றம் சென்றேனோ அந்த விடயங்கள் குறித் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபடவேண்டியது முக்கியமானது நான் கருதுகின்றேன்.

இன்றைய சந்திப்பில் நான் தெரிவித்த முக்கியமான விடயங்கள் ஓஸ்லோ நோர்வே மற்றும் உலகம் ஆகியன இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை காரணமாகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன்.- அதிகரித்துவரும் சமத்துவமி;ன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியனவே அந்த இரண்டு விடயங்கள் ஒஸ்லோவின் பிரதிமேயராக எனக்கு ஆறு வருடங்கள் கிடைத்த அனுபவத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். பசுமை மாற்றம், அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்கொள்வதை நோக்கி நாங்கள் செயற்பட்டோம்.

முக்கியமாக அதிகளவு மக்களை எப்படி தொழில்வாழ்க்கைக்குள் ஈர்ப்பது என்பது குறித்து கவனம் செலுத்தினோம், ஏனென்றால் நோர்வேயை வளமான செல்வந்த நாடாக மாற்றுவது எண்ணெயில்லை,தொழில்புரிந்து வரி செலுத்தும் மக்களே நோர்வேயை செல்வந்தநாடாக மாற்றுகின்றனர்,எங்கள் சமூகநலன்புரி அரசு வலுவானது சமூக பொருளாதார பாலியல் சமத்துவத்திற்குள் நாங்கள் செயற்படுகின்றோம்.

உங்களில் பலருக்கு இலங்கையுடனான எனது உறவு குறித்து கேள்விகள் இருக்கலாம். நான் இலங்கையில் பிறந்ததால் நான் இலங்கையுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் தொடர்பை கொண்டிருப்பேன்.

நான் இலங்கையில் பிறந்தேன் 13 வருடங்கள் தமிழ் பாடசாலைக்கு சென்றேன்,தமிழ் எனது தாய்மொழி.
இலங்கை மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு வேண்டும் என்பது குறித்த அனுதாபமும் பச்சாதாபமும் எனக்கு உள்ளது.

இலங்கை என வரும்போது முதலில் சர்வதேச சமூகத்திடமிருந்து சில விடயங்களை நாங்கள் செய்யலாம். அதேவேளை இலங்கை மக்கள் இணைந்து தங்களிற்காக செயற்படவேண்டிய விடயங்கள் பல உள்ளன.

முதலாவதாக யுத்தம் குறி;த்து விசாரணை செய்யப்படவேண்டும்.

இலங்கையின் போரில் இறுதி இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐநா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிக்கவேண்டும்.ஏனெ;றால் ஜனநாயகத்தில் வெளிப்படை தன்மை என்பது மிகவும் முக்கியமான அம்சம் நல்லிணக்கத்திற்கும் இது அவசியமான விடயம்.

இரண்டாவது யுத்தம் மோதல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தவேண்டும். தொழில்கட்சியின் இளைஞர் லீக்கின் உறுப்பினராக நான் இதனை முன்னெடுத்தேன்.

மூன்றாவது நோர்வேயிலிருந்து இலங்கையுடனான எங்கள் உறவை தொடரவேண்டும்,பகிஸ்கரிப்பு ஒரு வழிமுறை என நான் கருதவில்லை.

எதிர்கால வெளிவிவகார அமைச்சரும் புதிய வெளிவிவகார அமைச்சரும் இது குறித்து சிறந்த திட்டமிடல்களை கொண்டிருப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

இறுதியாக அதிகரித்துவரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றம்ஆகியவற்றிற்கான தீர்வை காணும்போது நோர்வே ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.