ஈழ தேசத்தின் விடுதலைக்குரலான “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்று எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் விடுதலைத்தாகத்தை வீரியம் கொள்ளச் செய்த பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்களின் பிரிவுச் செய்தி அறிந்து துயருற்றுள்ளோம்.
என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கால வெளியில் அள்ளுண்டு போகாத விடுதலையின் தியாகத்தை அர்ப்பணிப்புக்களை மாவீரச் செல்வங்களின் கனவுகளை அவர்களை சுமந்த தாய் மண்ணின் ஏக்கத்தை விடுதலை மீதான தைரியத்தை சேதாரமின்றி எங்கள் தலைமுறையிடையே பரவச் செய்த குரலோன் வர்ண ராமேஸ்வரன் . “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளை திறவுங்கள்” என்பதனூடாக துயிலுமில்லங்கள் எங்கும் விடுதலையின் தர்மத்தை அதன் அறத்தை மெய்சிலிர்க்கும் வகையில் பரவச் செய்தவர்.
அவரது அற்புதமான கலை ஞானம் தமிழ்த் தேசியம் மீது கொண்டிருந்த அற்புதமான பற்றுறுதி நெஞ்சார தமிழ்த் தேசம் விடுதலை கண்டு விடுமென்ற கனவுக்கும் உயிர்ப்பு க்கும் தலைசாய்த்து எமது தாயகத்தில் இருந்து இறுதி வணக்கத்தை செலுத்துகிறோம்
என்றோ ஒரு நாள் உங்கள் கனவுகள் மெய்ப்படும் எனும் திடசங்கற்பத்துடன் எமது இறுதிவணக்கத்தை செலுத்துகிறோம்..என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

