எமக்குத் தேவை நீதி. சான்றிதழ்கள் அல்ல. 

243 0

உலக வல்லரசுகளின் கைப்பாவை அமைப்பான ஐநா ஒரு போராடும் இனத்தை எப்படி கையாளும் என்பதில் போதிய அறிவிருந்தும் நாம் அந்த கோணத்தில் ஐநாவை அணுகவில்லை.பிரச்சினை இங்கு அதுவல்ல. 2009 இற்கு பிறகு நீதி வேண்டி நிற்கும் ஒரு தரப்பாக நாம் எப்படி ஐநா வை அணுகினோம் என்பதுதான் இங்கு பிரச்சினையே!ஐநாவை ஒரு குற்ற தரப்பாக நாம் அணுகத் தவறிவிட்டோம்.

ஈழத்தில் நடத்தப்பட்டது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான, அமைதிக்கெதிரான குற்றம். இதுவே இன அழிப்பாக மாறியது. இது ஐநாவின் பூரண அறிவுடன் நடத்தப்பட்டது. எனவே ஐநாவை குற்றவாளியாக்குவதனூடாகத்தான் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்ற கள யதார்த்தத்தை – நிலவரத்தை நாம் மறந்து விட்டோம் விளைவு, இன்று இன அழிப்பு அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோர்களுக்கு ‘மரணச் சான்றிதழ்’ வழங்குவதில் கொண்டு வந்து முடித்திருக்கிறது ஐநா.

உடனடியாகக் களம், புலம், தமிழகம் முழுவதும் பரந்திருக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சிவில் அமைப்புக்கள் ஒருமித்த குரலில் இனப்படுகொலையாளி கோத்தபாயவின் இந்த அறிவிப்பையும், அதற்கு ஒத்தூதும் ஐநா வின் செயலையும் கண்டிக்க வேண்டும்.