கப்ராலுக்கு எதிரான வழக்கு : ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம்

154 0

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட முடிவினை செல்லுபடியற்றது என அறிவிக்கக் கோரியும் அவரைக் கைது செய்து விசாரணை செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டளை நீதிப்பேராணை மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன் வைக்க பிரதிவதிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த குறித்த மனு மீதான பரிசீலனைகள் ;இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

இன்று ;குறித்த மனுவானது பரிசீலனைக்கு வந்த போது, பிரதிவாதி அஜித் நிவாட் கப்ரால் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனக்கு நேற்று (21) இரவே மனுக்கள் தொடர்பிலான ஆவணங்கள் கிடைத்ததால் அவற்றை ஆராய கால அவகாசம் தேவை என கோரினார். எனவே அவற்றை ஆராய்ந்து, மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.