மாளிகாவத்தையில் பட்டினியால் வாடும் மக்கள்

255 0

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருப்பதால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அன்றாட உணவுக்காக பெரும் அவதிப்படுகின்றனர்.

தலை நகர் கொழும்பில் மூவினங்களையும் சேர்ந்த பெருமளவான ஏழைக் குடும்பங்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மாளிகாவத்தைப் பகுதியும் ஒன்றாகும்.

இந்தப்பகுதியில் 70 ஆவது தோட்டத்தில் சிறிய சிறிய வீடுகளில் வசிக்கும் மக்களின் அன்றாட தொழில் கூலி வேளை செய்தல், முச்சக்கர வண்டி ஓட்டுதல் மற்றும் சிறிய வேலைகளில் ஈடுபடுபவர்களாகும்.

இப்பகுதி மக்கள் லொக்கடவுன் காரணமாக பணம் இலலாத காரணத்தினால் அன்றாடம் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சிறுவர்கள் குழந்தைகள் உணவிற்காக அழுகின்றனர் என்றும் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு இதுவரை அரசின் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை என்றும் அரசின் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்பட வில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இதுவரை தமது அவல நிலைமைகள அரச அதிகாரிகளோ அல்லது அரசியல் வாதிகளோ அமைச்சர்களோ வந்து பார்க்கவில்லை என்றும் குற்றம் சுமத்தும் அவர்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு லொக்டவுனையாவது நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.