நாமல் ராஜபக்ஷவைக் கைதுசெய்யத் தீர்மானம்

532 0

NAAMALசிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை நாளை (திங்கட்கிழமை) கைதுசெய்யவுள்ள தீர்மானித்துள்ளதாக காவல்துறை தலைமையகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறை தலைமையகத்திற்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்தே நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்படவுள்ளார்.

முறைகேடான முறையில் சொத்துச் சேர்த்தமைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு விடுத்த உத்தரவை உதாசீனம் செய்ததாக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உத்ததரவை மதிக்காமல் ஆணைக்குழுவை அவமதித்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நமல் ராஜபக்ஷ முறைகேடாக சொத்துக்கள் சேர்த்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து நடைபெற்று வரும் விசாரணைக்கு கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு அறிவித்திருந்தபோது மார்ச் 15ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

ஆனால், அவர் அன்றும் முன்னிலையாகாததால் மே மாதம் 25ஆம் திகதி முன்னிலையாகுமாறு வழங்கிய கால அவகாசத்தையும் அவர் உதாசீனம் செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவரைக் கைதுசெய்யும் உத்தவை காவல்துறை தலைமையகம் வழங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.