நிழல் அமைச்சரவை குறித்து மஹிந்த கருத்து

516 0

mooooooooooooooooooவரவு செலவுத் திட்ட பிரேசணை சமர்ப்பிக்கப்பட்ட போது, அந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே நிழல் அமைச்சரவையில் பெயரிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிழல் அமைச்சரவை எமது கொள்கைக்கு உட்பட்டதல்ல.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட்டு நாடாளுமன்ற முறைமைக்கு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
அவ்வாறு வரும்போது, நாங்கள் எதிர்கட்சி என்ற வகையில் அதற்கு ஏற்றவாறாக தயார் நிலையில் இருக்க வேண்டாமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.