இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதன் பின்னர் ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு ஜயந்த கெடகொடவை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
நிதி மூலதனச்சந்தை மற்றும் அரச முயற்சியான்மை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜாங்க அமைச்சு பதவியையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்புரிமையினையும் இன்றைய தினம் இராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதைத் தொடர்ந்து தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு தற்போது ஜயந்த கெடகொடவை மீண்டும் நியமிக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஜயந்த கெடகொட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகைக் காகத் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

