மன்னாரில் சனிக்கிழமை மட்டும் 95 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

248 0

மன்னாரில் நேற்று முன்தினம் மட்டும் 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 11 தினங்களில் மட்டும் 276 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்த கொரோனா நிலவரம் தொடர்பான அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் சனிக்கிழமை மட்டும் 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 84 கொரோனா தொற்றாளர்கள் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 11 நாட்களில் 276 கொரோனா தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் மாவட்டத்தில் 1943 தொற்றாளர்களும், தற்போது வரை மாவட்டத்தில் மொத்தமாக 1960 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் சனிக் கிழமை வரை 22 கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டது.