பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாதநிலை

275 0

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை பிரேத அறையி;ல் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வே கமலநாதன் தெரிவித்துள்ளார்.

எமது வைத்தியாசாலையில் கடந்த மே மாதம் 17 ம் திகதி கொரோனா விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 21 பேர் விடுதியில் கிசிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்,20 வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் உள்ள நெருக்கடிகள் காரணமாக வைத்தியசாலை பிரதே அறையில் சடலங்கள் தேங்கி காணப்படுகின்றன.

எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்கனை வைத்திருப்பதில் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிவரும்.

யாழில் ஒரு மின்தகனசாலை உள்ளது யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை எரியூட்டுவதாலேயே எமது மருத்துவமனையின் சடலங்களை எரியூட்டுவதில் தாமதங்கள் காணப்படுகின்றன.

இத்தகைய தாமதங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வெளியிடங்களிற்கு கொண்டு செல்வதற்கு தயங்குகின்றனர். என தெரிவித்துள்ளார்.