9 ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணம்.

347 0

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐ.நா நோக்கி செல்லும் ஈருறுளி அறவழிப்போராட்டம் இன்று 10.08.2021 லூக்சம்பேர்க் , யேர்மன் எல்லையை வந்தடைந்தது.
அங்கிருந்து இன்று மாலை 4 மணிக்கு சாபுறுக்கன் நகரபிதாவின் அலுவலகத்தை வந்தடைந்த ஈருறுளிப்பயணம் , சாபுறுக்கன் நகரபிதாவின் பிரதிநிதியிடம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என கோரும் மகஜர் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து
சாபுறுக்கன் மா நகரத்தில் இருந்து புறப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் இன்று மாலை பிரான்ஸ் எல்லையை சென்றடைந்தது.

 

“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.