வைத்தியர். ஆனந்த விஜயவிக்ரமவின் இராஜினாமாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் -சுகாதார அமைச்சு

332 0

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் இடைக்கால தொழில்நுட்பக் குழுவில் இருந்து வைத்தியர். ஆனந்த விஜயவிக்ரம விலகுவதற்கு எடுத்த முடிவை தொடர்ந்து, அவரது முடிவு தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவரது இராஜினாமா தொடர்பில் மறுபரிசீலனை செய்வது நல்லது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கும் முக்கிய மருத்துவ நிபுணர்களில் வைத்தியர் விஜயவிக்ரமவும் ஒருவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவரது பதவி விலகல் முடிவானது நாட்டின் கொவிட் -19 கட்டுப்பாட்டின் முன்னோக்கிய பாதையின் பாரிய பின்னடைவாக இருக்கும்.

எனினும், அது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் அவரின் முடிவை மதிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.