மட்டக்களப்பில் கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர் பிரகாஷிற்கு அஞ்சலி!

171 0

கொரோனா தொற்றினால் உயிரிழந்த யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் ஆத்ம சாந்திவேண்டி இன்று திங்கட்கிழமை (06) மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மட்டு ஊடக மையத்தில் பிரகாஷின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் பா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உயிரிழந்த ஊடகவியலாளரின் திருவுருவ படத்திற்கு சுடர்ஏற்றி ஆத்மா சாந்தியடைய வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.