கிருமிகளிடம் இருந்து 99.9சதவீதம் பாதுகாப்பு பெறக்கூடிய முகக்கவசம் ஒன்றை பேராதெனிய பல்கலைக்கழக ஆய்வு குழு நிர்மாணித்துள்ளது.
நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள ஏற்றுமதித்துறையை மீளவும் கட்டியெழுப்ப இந்த முகக்கவச உற்பத்தி கைக்கொடுக்கும் என பேராதெனிய பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
இந்த முகக்கவசமானது வெளிநாடுகளில் நல்ல வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ;எம்.டி.லமாவங்ச தெரிவித்துள்ளார்.

