சாவகச்சேரியில் 106 பேருக்கு கொரோனா!

180 0

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று  103 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 25 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 34 பேரையும் அவர்களது உடல்நிலையைக் கணித்து ஒரு பகுதியினர் வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினர் கொவிட்-19 இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.