அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த குடும்ப பெண், இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூரியவெவ – மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய பெண்ணொருவரே தனது வீட்டில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தனது 17 வயதான மகனுடன் வீட்டில் இருந்துள்ளதுடன், பல வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

