வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7.16 லட்சம் வாக்காளர்கள்

163 0

வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்கள், 2079 கிராம ஊராட்சி வார்டுகளும், 7 ஊராட்சி ஒன்றியங்களில் 138 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வார்டுகள் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட வார்டு எல்லைக்குட்பட்டு, வார்டு வாரியான ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 1331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக வாக்காளர் பட்டியலை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார். வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 898 ஆண்கள், 3 லட்சத்து 68 ஆயிரத்து 6 பெண்கள், இதர பிரிவினர் 80 பேர் என மொத்தம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர்.