ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்-தயாசிறி

313 0

ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

வெளிநாட்டு இருப்புக்களில் குறைவு காணப்படும் நிலையில், அரசாங்கம் ஏற்றுமதியை அதிகரிக்க விரும்புகிறது என கூறினார்.

அதன்படி முக்கிய அமைச்சர்களை அழைத்து நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முறை குறித்து நிதியமைச்சரும் விவாதித்தார் என தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டில், நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தாலும் அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் குறைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

ஆகவே டிசம்பர் மாத இறுதிக்குள் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால், டிசம்பர் முதல் நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் தொடங்க முடியும் என்றும் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.