2000 ரூபாய் கிடைக்காதவர்கள் முறையிடலாம்

176 0

அரசாங்கம் வழங்கும் 2000 ரூபாய் நிவாரண பணம் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் அநேகமான பகுதிகளில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கான 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.