கொழும்பு நடமாடும் வியாபாரிகளுக்கான அறிவித்தல்!

157 0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தினுள் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்கள் மாத்திரமே நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடமுடியும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெறாத நபர்கள் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபட்டால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதீப் யசரத்ன இதனை குறிப்பிட்டார்.