ஆண்டுக்கு 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு தருகிறேன்- சபாநாயகர் அறிவிப்பு

151 0

பனை மரத்தின் பலன்களையும், நலன்களையும் கருத்தில் கொண்டு அதை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாக வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

தமிழகத்தில் பனை மரத்தை பாதுகாக்க முதல்- அமைச்சர் உத்தரவின்பேரின் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் குடிமராமத்து என்ற பெயரில் பனைமரங்களை வெட்டினார்கள்.

ஆனால் நாங்கள் பனை மரத்தின் பலன்களையும், நலன்களையும் கருத்தில் கொண்டு அதை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறோம்.

சுனாமி தாக்கிய போது சாயாத ஒரே மரம் பனை மரம் தான் என்று பனைமரத்தின் சிறப்புகளை கூறினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு ஆண்டுக்கு 1 லட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு தருகிறேன் என்று கூறினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இதனை கேட்டு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பனைமரத்தின் சிறப்பை பார்த்தீர்களா? என்று கூறினார்.

அப்போது அவை முன்னவர் துரைமுருகன், சபாநாயகரை பார்த்து வேளாண் அமைச்சர் பல வி‌ஷயங்களை பேசிய போது வராத ஆர்வம் பனை மரத்தை பற்றி பேசும்போது மட்டும் சபாநாயகருக்கு வந்துவிட்டது என்றார்.

அதற்கு சபாநாயகர் சிரித்துக் கொண்டே ‘அதுதான் வாரிசு’ என்று கூறினார். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.