விரைவாக பரவிச்செல்லும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் 10 பேர், வலியுறுத்தியுள்ளனர்.
கையெழுத்திட்ட கடிதமொன்றின் ஊடாக அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், கொரோனா தொடர்பான தரவுகளை திட்டமிட்டு சிதைக்கும் அதிகாரிகள் மீது தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.



