மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

160 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தும் தொற்றும் முறை மற்றும் மரண எண்ணிக்கைகளையும் பார்க்கும் போது டெல்டா திரிபு இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி என்.மயூரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”மட்டக்களப்பு மாவட்டத்திலே கொவிட் தொற்றக்குள்ளான ஒரு சிலர் வெளியில் சென்று வரும் சந்தர்ப்பங்கள் தற்போது அவதானிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தொற்றுக்குள்ளானவர்கள் தமது தேவைகளை நிறைவேற்ற வெளியில் செல்லாது இருப்பதோடு  உறவினர்கள், நண்பர்கள் மூலம் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுமாறும் , தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்களும் வீட்டைவிட்டு வெளியில் வராது இருக்குமாறும் கேட்டுக்கொண்டதோடு

அவ்வாறு வரும் சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் குறிப்பிட்டார்.