மட்டு. மாமாங்க பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கு அபராதம்

194 0

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை கோவிலுக்குள் உள்வாங்கிய ஆலய நிர்வாகத்தினர் 5 பேருக்கு எதிராக சுகாதார துறையினர் வழக்கு தாக்குதல் செய்து அவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (09) ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு ஒரு குற்றத்துக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் நேற்று (08) இடம்பெற்றது. இதன் போது சுகாதார துறையினர் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் சுகாதார துறையினரின் அனுமதியை மீறி அதிகளவான பக்தர்கள் தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து குறித்த ஆலய நிர்வாகத்தினர் 5 பேருக்கு எதிராக அனுமதியை மீறி ஆலயத்தினுள் அதிகளவான மக்களை உள்வாங்கியமை மற்றம் சுகாதார துறையினரின் சுகாதார வழிகாட்டலை பின்பற்றாமால் உதாசீனம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு அமைவாக அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று வழக்கு தாக்குதல் செய்தனர்

இதனையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு ஒரு குற்றத்துக்கு ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.