பொறுப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது – வைத்தியர் டயாழினி

193 0

 பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து செயற்பட்டு தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய காலமிது என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி டயாழினி மகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வியாழக்கிழமை முதல் கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. அத்துடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த ஒன்பது பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .

பொதுமக்கள் அனைவரும் மிக அவதானமாக செயற்பட வேண்டிய காலமிது.

ஒவ்வொருவரும் தானும் பாதுகாப்பாக இருந்து தான் சார்ந்த சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பேணி தொற்றுக்கு இடமளிக்காது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் இவ்வளவு அனர்த்தம் நேர்ந்தும் இன்னமும் விழிப்படையவில்லை. இதன் விளைவுகள் மிக மோசமானதாக அமையலாம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.