கொடிகாமத்தில் சேதமாக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம்!

177 0

கொடிகாமத்தில் A9 பாதையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சேதமாக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தை மீண்டும் கட்டும் பணிகளையும் பிரதமரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் ஆரம்பித்து வைத்தார்.

யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் அமைந்திருந்த குறித்த ஆலயம் கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி இரவு வேளையில் கனரக வாகனத்தினால் இடித்து சேதப்படுத்தப்பட்டது.

 

இந்த சம்பவம் சமூக மட்டத்தில் பல எதிர்ப்புகளையும், இந்துக்கள் மத்தியில் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்த விடயம் பிரதமரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதையடுத்து உடனடியாக விசாரணைகளுக்கு உத்தரவிட்ட இணைப்பாளர்,

ஆலயத்தினை மீண்டும் கட்டும் வேலையையும் ஆரம்பித்ததுடன், ஆலயத்தை சேதப்படுத்திய வாகன சாரதியையும் CCTV உதவியுடன் சட்டத்திற்கு முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.