காணி பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவை

150 0

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் காணிப்பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஏறாவூர்பற்று- செங்கலடி தளவாய் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இந்த நடமாடும் சேவை நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்தது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் காணிப்பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள் எனும் திட்டத்தின் கீழ், மக்களுக்கு காணி பிணக்குகள் தொடர்பான விழிப்புணர்வுடன் நடமாடும் சேவை  இடம்பெற்றிருந்தது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் தவிசாளர் குருநாதன், மத்தியஸ்தர் ஏ.பி.எம். முஸ்தபா, லிப்ட அமைப்பின் கள உத்தியோகஸ்த்தர் சு.லதா, அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பு.வித்யாகாந் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது காணி பிணக்குகள் தொடர்பானவர்களுக்கான விண்ணப்பங்கள், நடமாடும் சேவையினூடாக பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.