சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

127 0

சிறுவர்கள் வீட்டு வேலைக்கமர்த்தப்படுகின்றமை தொடர்பில் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய பெருமளவான சிறுவர்கள் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாவே காணப்படுகின்றனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு கிராம உத்தியோகத்தர் மட்டத்திலிருந்து தேவையான அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தோட்டப்புறங்களிலுள்ள குடும்பங்கள் பற்றிய தகவல்கள் கிராம உத்தியோகத்தர்களிடம் காணப்படும். எனவே ஏதேனுமொரு வீட்டில் சிறுவரொருவர் இல்லையென்று தகவல்கள் கிடைக்கப் பெறும்பட்சத்தில் அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிறுவர்கள் வீட்டு வேலைக்கமர்த்தப்படுகின்றமை தொடர்பில் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய பெருமளவான சிறுவர்கள் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாவே காணப்படுகின்றனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு கிராம உத்தியோகத்தர் மட்டத்திலிருந்து தேவையான அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தோட்டப்புறங்களிலுள்ள குடும்பங்கள் பற்றிய தகவல்கள் கிராம உத்தியோகத்தர்களிடம் காணப்படும். எனவே ஏதேனுமொரு வீட்டில் சிறுவரொருவர் இல்லையென்று தகவல்கள் கிடைக்கப் பெறும்பட்சத்தில் அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதை தடுக்க வேண்டும்.

சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டிய ஜனாதிபதி , ஏனைய நாடுகளில் சிறுவர் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளை அவதானித்து நகர மற்றும் கிராமிய மட்டங்களில் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆரம்ப கல்வி, பாடசாலை மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு சகல மாணவர்களையும் உள்ளீர்த்தல் , சிறுவர்கள் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் இருப்பதற்கான காரணிகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வை வழங்குதல் என்பன சிறுவர் பாதுகாப்பு  அதிகாரசபையின் பிரதான பொறுப்பாகும்.

அனைத்து மதங்களைச் சேர்ந்த குழந்தைகளையும் அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதன் மூலம் ஆன்மீக நற்பண்புகளை வளர்ப்பதன் ஊடாக குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மாணவர்களை அந்த பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு , அவர்களை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்குவதற்கு தூண்டிய காரணிகள் தொடர்பில் இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் வேலைத்தளங்களில் தெளிவுபடுத்தல், தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துதல், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்ற குடும்பங்களிலுள்ள குழந்தைகளை இனங்காணல் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் இதன் போது ஜனாதிபதி வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.