மட்டு. களுவன்கேணி கோவில் திருவிழாவில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா

300 0

மட்டக்களப்பு களுவன்கேணி மாரியமன் கோவில் திருவிழாலில் ; கலந்துகொண்ட கோவில் தலைவர், செயலாளர், கோவில் குருக்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா தொற்று ; வியாழக்கிழமை (05) கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அந்த கிராமசேவகர் பிரிவான வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவை முடக்க தேசிய கொரோனா செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செங்கலடி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சிவசேகரன் சிவகாந்தன் தெரிவித்தார்.

செங்கல பிரதேச சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள குறித்த ஆலய  உற்சவம் நடத்துவது தொடர்பாக சுகாதார துறையிடம் அனுமதியை கோரியபோது 15 பேருடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உற்சவத்தை நடாத்த அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த அனுமதியை மீறி ஆலய நிர்வாகம் கடைசிநாள் உற்சவத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க ஆலய நிர்வாகம் அனுமதியளித்ததையடுத்து அங்கு பெரும் திரளான மக்கள் உற்சவத்தில் பங்கு கொண்டுள்ளனர்

இதனையடுத்து குறித்த ஆலய நிர்வாகத்தை எச்சரித்ததுடன் ; ஆலத்துக்கு சென்ற அந்த வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ளவர்களுக்கு கடந்த 3 தினங்களாக தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் ஆலய தலைவர் செலாளர் ஆலய குருக்கள் அவரது குடும்பம் உட்பட 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படடதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த கிராம சேவகர் பிரிவை தனிமைப்படுத்தி முடக்க தேசிய கேதரோனா செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.