நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

236 0

 அத்தியாவசிய உணவு பொருட்களை நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இடைத்தரகர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரிசியின் நிர்ணய விலையை தொடர்ந்து பேணுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் ஆலை உரிமையாளர் ஆகியோருக்கு புறம்பாக நெல்லை பதுக்கி வைத்துள்ள இடைத்தரகர்கள் வசமுள்ள நெல்லை அரசுடமையாக்குவதற்கும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான சட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன.

அரசி விலை அதிகரிக்கக்கூடும் என கருதி நெல்லை பதுக்கி வைத்துள்ளவர்கள் தொடர்பில் ; கண்காணிக்க நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தற்போது கண்காணிப்பு நடடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

வாடிக்கையாளர் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு  இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.

உத்தரவாத விலைக்கு மேலதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக இதுவரையில் அறவிடப்பட்ட தண்டப்பணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் தொடர்பில் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை திருத்தியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்த முற்படும்போது பல நெருக்கடிகளை இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் திர்க்கொண்டுள்ளன.

உத்தரவாத விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்னை செய்யும்போது அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்கும் திருத்த யோசனைக்கு முன்னுரிமை வழங்கி அதனை எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவேற்ற தீர்மானித்துள்ளோம்.