சுகாதாரப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

255 0

நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் சகல வைத்தியசாலைகளிலும் சுகாதார தரப்பினர் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முற்பகல் 10 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக நிறைவுகாண் சுகாதார சேவை ஒன்றிணைந்த உயர்பீடத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார். சுகாதார சேவையாளர்கள் உட்பட சகல அரச சேவையாளர்களையும் சேவைக்கு அழைப்பதற்காக அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் 11 மணிவரையில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக வைத்தியசாலைகளின் நாளாந்த செயற்பாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருந்த மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

மேலும் வைத்தியசாலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்பட்ட து