2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தெரிவுகளில் ஈழத் தமிழர்!

267 0

அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள ‘A Passage North’ எனும் நூலாக்கம் booker பரிசுக்கான ‘Long List’ இல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

image_bd8e50eb0d.jpg

அண்மைய காலங்களில் இலங்கையர்கள், எழுத்துலகில் (ஆங்கில) தமது முத்திரைகளை பதித்து வருகிறார்கள். இந்த அறிவிப்பு இவ்விடயத்தில் இன்னுமொரு மைல் கல்லாகும்.

இலங்கையின் யுத்தகாலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, வடக்கினையும்,யுத்த பாதிப்புகளையும் அதனூடாக, நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக நூல் அமைந்துள்ளது.

இந்த ‘Long List’ இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, மற்றும் முன்னதாகவே புக்கர் பரிசு வென்ற வென்ற ஒருவரும், உள்ள நிலையில், அருட்பிரகாசதின் படைப்பும், சேர்த்து லிஸ்டில் உள்ள 13 படைப்புகளில் ஒன்றாகும்.

5 பேர் கொண்ட தெரிவுக்குழு, முதலில் 6 பேர் கொண்ட ‘short லிஸ்ட்’ இணை 14 செப்டம்பர் அன்றும், வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும்.