உர இறக்குமதி தடையை நிதி அமைச்சர் பஷில் நீக்கியுள்ளமை ஏன்?

157 0

சிறிலங்கா ஜனாதிபதியின் இரசாயன உர இறக்குமதி தடையை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நீக்கியுள்ளமை ஏன்? ஜனாதிபதியின் கொள்கைத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் கேள்வி எழுப்பினார்

அவர் மேலும் கூறுகையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கையொப்பத்தில் சகல வங்கிகளுக்கும் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விடயமானது,

இதுவரை காலமாக தெரிவு செய்யப்பட்டிருந்த வெவ்வேறு இரசாயன உரம் இறக்குமதி தடையானது ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் அனுமதிப்பத்திரத்தின் மூலமாக இராசாயன உரம் இறக்குமதி செய்ய முடியும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்றுமதி இறக்குமதி சட்டத்திற்கு அமைய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து அரசாங்கம் பதில் கூறவேண்டும்.

இரசாயன உர இறக்குமதி தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தீர்மானம் ஒருபோதும் மாற்றியமைக்கப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியாக தெரிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதியின் தீர்மானத்தை மாற்றியமைத்துளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்