மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு – அண்ணாமலை

167 0

தமிழக விவசாயிகளுக்கு பாஜக துணையாக இருக்கும் என தமிழக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டும் பணியை கைவிடவேண்டும் என தமிழக அரசு பல்வேறு வகைகளில் தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. என்றாலும் மேகதாது பகுதியில் அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது.
காவிரியின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்டக்கூடாது என்று உத்தரவு உள்ளது. இருப்பினும் காவிரியில் கர்நாடகவிற்கு முழு உரிமை உண்டு. எனவே மேகதாது அணையை கட்டியே தீருவோம் அதற்கானப் பணியை கர்நாடக அரசு விரைந்து முடிக்கும் என்று முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மை அறிவித்து இருந்தார்.
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின்  நிலைப்பாட்டை தமிழக பாஜக எவ்வாறு பார்க்கும், தமிழக மக்களிற்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக என்ன முடிவை எடுக்கும் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முடியாது என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதலளிக்கும் விதமாக கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜகவின் அண்ணாமலை கூறுவதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை என்று கூறியுள்ளார்.