டோக்கியோ ஒலிம்பிக்: புதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி

169 0

ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஒலிம்பிக் தொடர்பானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து போட்டிகள் நடைபெறுகின்றன.
என்றாலும், கொரோனா  ஒலிம்பிக் கிராமத்தில் அடியெடுத்து வைத்து வீரர்களை தாக்கி வருகின்றன. இன்று புதிதாக ஒலிம்பிக் தொடர்பான 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் யாரும் வீரர்கள் கிடையாது. 21 பேரில் 16 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஜப்பான் முழுவதும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டோக்கியோவில் 3 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மூன்று ஒலிம்பிக் வீரர்கள் உட்பட 27 பேர் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். அவர்களில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற அமெரிக்காவின் போல் வால்ட் வீரர் வால்டர் சாம் கெண்ட்ரிக்ஸும் அடங்குவார்.