சைரஸ் பூனாவாலாவுக்கு லோகமான்ய திலக் தேசிய விருது

160 0

சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலாவுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலாவுக்கு ‘லோகமான்ய திலக்’ தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லோகமான்ய திலக் அறக்கட்டளையின் தீபக் திலக் கூறியதாவது:
கொரோனா பேரிடரில் சைரஸ் பூனாவாலாவின் பணி போற்றுதலுக்கு உரியது. அவரின் அயராத அரும்பணியால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற பெரிதும் உதவியது. குறைந்த விலையில் பல்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரிப்பதில் சைரஸ் பூனாவாலா முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.
எனவே, அவரது சேவையைப் போற்றும் விதமாக 2021-ம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் தேசிய விருதை சைரஸ் பூனாவாலாவுக்கு வழங்கி கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.