அண்ணல் நபிகளாரை விமர்சித்த ஜெயசிறில் உடனடியாக கைது-றிசாத்

261 0

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலக முஸ்லிங்களின் தலைவராக, இறைத்தூதராக மட்டுமின்றி முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் அண்ணலார் முஹம்மது நபி(ஸல்) அவர்களை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ள பதிவு மூலம் நாட்டின் சமாதானச்சீரழிவு ஏற்படவும்,மிகப்பெரிய இனக்கலவரம் உருவாகுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதால் இவரை கைது செய்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்குமாறு பாதுகாப்பு தரப்பினரை வேண்டிக்கொள்கிறேன் என தேசிய காங்கிரசின் கல்முனை அமைப்பாளரும் பிரபல உயிரியல் விரிவுரையாளருமான றிசாத் செரீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக செறிந்து வாழும் இந்தநாட்டில் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க எத்தனித்திருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவரை நாட்டை சீரழிக்க முனைந்த குற்றத்திற்காக கைது செய்து இலங்கை குடியரசின் சட்டத்தின் படி உயர்ந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மணி நாயகத்தை இப்படி சீண்டுவதானது மிகவும் ஆபத்தான செயலாகும். உலக புகழ்பெற்ற முஸ்லிம் அல்லாத மார்க்க அறிஞர்களே பாராட்டி புகழும் இறைத்தூதரை இப்படியான முகவரியற்றவர்கள் சீண்டிப்பார்ப்பது அபத்தமானது. இவரை போன்ற இனவாதிகளுக்கு பாகம் புகட்ட இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.