தமிழகத்தில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் 15 பேருக்கு பதவி உயர்வு கொடுத்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1. அமரேஷ் புஜாரி, (தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி.) – இவர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. டாக்டர் எம்.ரவி (ஆவின் நிறுவனத்தின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரி) – இவர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று தொடர்ந்து ஆவின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பணியாற்றுவார்.
3. டாக்டர் கே.ஜெயந்த் முரளி (சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி.) – இவர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில போக்குவரத்து திட்டப்பிரிவில் பணியாற்றுவார்.
4. எம்.என்.மஞ்சுநாதா (திருச்சி நகர போலீஸ் கமிஷனர்) – இவர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று மின்சார வாரிய விஜிலன்ஸ் பிரிவில் பணியாற்றுவார்.
5. டாக்டர் ஆர்.தினகரன் (நெல்லை சரக டி.ஐ.ஜி.) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணியாற்றுவார்.
6. அவி பிரகாஷ் (மத்திய அரசு பணியில் டி.ஐ.ஜி.) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து மத்திய அரசு பணியில் நீடிப்பார்.
7. வித்யா ஜெயந்த் குல்கர்னி (சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையகப் பிரிவில் பணியாற்றுவார்.
8. எ.அருண் (திருச்சி சரக டி.ஐ.ஜி.) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றுவார்.
9. டி.கல்பனா நாயக் (தெலுங்கானா மாநிலத்தில் டி.ஐ.ஜி.யாக பணியில் உள்ளார்) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தெலுங்கானா மாநில அரசில் தொடர்ந்து பணியாற்றுவார்.
10. எம்.டி.கணேசமூர்த்தி (சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர்) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.

11. சி.சந்திரசேகர் (தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரி) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றுவார்.
12. என். அறிவுசெல்வம் (சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி.) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
13. சி.ஈஸ்வரமூர்த்தி (மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ரகசிய புலனாய்வு பிரிவு டி.ஐ.ஜி) – இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ரகசிய புலனாய்வு பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. ஓம்பிரகாஷ் மீனா (மதுரை ஊமச்சிக்குளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு) – இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில குற்றப்பிரிவு சி.ஐ.டி. சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15. ஜி.ஷாசங் ஷாய் (தென்காசி உதவி சூப்பிரண்டு) – இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை பூக்கடை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.
16. தீபக் எம்.தாமோர் – மத்திய அரசில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர் கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

