வவுனியாவில் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

45 0

அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்களால் நாடு பூராகவும் ஒரு மணிநேர போராட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களால் வைத்தியசாலை வளாகத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தாதிய உத்தியோகத்தர்களிற்கு கொவிட் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு, கொரோனா விடுதிகளுக்குரிய வசதிகளை வழங்கு, தாதியசேவை பதவிநிலை சேவை என சுற்று நிருபம் வெளியிடு’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.