அமெரிக்கா 29 பதக்கங்கள் பெற்றிருந்தாலும், தங்கப்பதக்கம் ஜப்பானைவிட குறைவாக இருப்பதால், 20 பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடம் வகிக்கிறது.டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியை நடத்தும் ஜப்பான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீன நாடுகளுக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது.
இன்று காலை 10.30 நிலவரப்படி ஜப்பான் 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்துள்ளது. சீனா 10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
ரஷ்யா 7 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா ஒரு வெள்ளியுடன் 41-வது இடத்தில் உள்ளது.

