குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஹரின் பெர்னாண்டோ ஆஜர்!

234 0

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட கருத்து தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் அழைப்பின்படி பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு அங்கு வந்துள்ளார்.