மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பொல விதானலாகே சமந்த குமார எனும் வெலே சுதா என்பவரை பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வௌியில் அழைத்து வருவதை தடுக்கும் விதமாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெலே சுதாவின் தாயாரான மாலதியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த தடையை நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை என்று கூறி தன்னுடைய மகனை சிறைச்சாலையில் இருந்து வௌியில் அழைத்து சென்ற கொலை செய்ய முயற்சி செய்வதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் தன்னுடைய மகனை வெளியில் அழைத்து செல்வதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

