ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதிகோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





