ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெவ்வேறு விலையில் சமையல் எரிவாயு

175 0

சமையல் எரிவாயுவின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எல். பி. ஜி. 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை 1,150 ரூபா என உறுதிப்படுத்தப்பட்டு நுகர்வோர் அதிகார சபையினால் ; வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

இப்புதிய விற்பனை விலை நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை மாவட்ட அடிப்படையில் வேறுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய , 18 லீற்றர் (9.6 கிலோகிராம் எடை) சமையல் எரிவாயு சிலிண்டரை கொழும்பு மாவட்டத்தில் 1150 ரூபாவிலும் ,கம்பஹா மாவட்டததில் 1150 ரூபாவிற்கும் , களுத்துறை மாவட்டத்தில் 1158 ரூபாவிற்கும, புத்தளம் மாவட்டத்தில் 1174 ரூபாவிற்கும், கேகாலை மாவட்டத்தில் 1178& ரூபாவிற்கும் பெற்றுக்கொள்ள முடியும்

இதேவேளை, குருநாகலை மாவட்டத்தில் ; 1177 ரூபாவிற்கும், காலி மாவட்டத்தில் ; 1181 ரூபாவிற்கும் , இரத்தினபுரி மாவட்டத்தில் 1181 ரூபாவிற்கும், கண்டி மாவட்டத்தில் 1191 ரூபாவிற்கும், மாத்தறை மாவட்டத்தில் 1194 ரூபாவிற்கும் ,மாத்தளை மாவட்டத்தில் 1195 ரூபாவிற்கும், திருகோணமலை மாவட்டத்தில் 1217 ரூபாவிற்கும், மற்றும் அநுராதபுர மாவட்டத்தில் 1215 ரூபாவிற்கும் பெற்றுக்கொள்ள முடிவதோடு, பொலன்னறுவை மாவட்டத்தில் 1215 ரூபாவிற்கும், வவுனியா மாவட்டத்தில் 1216 ரூபாவிற்கும், மன்னார் மாவட்டத்தில் 1234 ரூபாவிற்கும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1217 ரூபாவிற்கும் ,மொனராகலை மாவட்டத்தில் 1248 ரூபாவிற்கும், பதுளை மாவட்டத்தில் 1235 ரூபாவிற்கும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் 1252 ரூபாவிற்கும், நுவரெலியா மாவட்டத்தில் 1229 ரூபாவிற்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1250 ரூபாவிற்கும், யாழ் மாவட்டத்தில் 1259 ரூபாவிற்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1243 ரூபாவிற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ; 1242 ரூபாவிற்கும் விற்பனை செய்ய முடியும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 லீற்றர் அதாவது 9.6 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலைக்கு மாறாக சிலிண்டரை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.