ஜே.பி.ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்ட பயணிகள்

192 0

கடந்த மாதத்தில் இருந்து பெண் பயணிகள் 24 மணி நேரமும், ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் புறநகர் ரெயில்களில் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு, அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்பின்னர் கடந்த மாதத்தில் இருந்து பெண் பயணிகள் 24 மணி நேரமும், ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் புறநகர் ரெயில்களில் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.  இக்கட்டுப்பாட்டால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இதனால் இக்கட்டுப்பாட்டை தளர்த்தக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜே.பி.ரெயிலுக்கு சீசன் டிக்கெட் வழங்க வலியுறுத்தி அந்த ரெயிலை மறித்து சுமார் 1,000 பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7:15 மணி முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.