கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள பரிசீலிக்குமாறு விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

164 0

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், டெல்டா திரிபானது அடுத்துவரும் மாதங்களில், நாட்டில் பிரதான வைரஸ் திரிபாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

பொது மக்கள் ஒன்றுகூடும் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 50 க்கும் 60 க்கும் இடையில் மட்டுப்படுத்த வேண்டும்.

இல்லையெனின், பொருத்தமான வகையில் தற்போதைய எண்ணிக்கையை விட குறைந்த மட்டத்தில் அந்த எண்ணிக்கை இருக்க வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

நாட்டில் தடுப்பூசி ஏற்றம் சிறப்பாக இடம்பெற்றாலும் கூட, முன்னுரிமை பிரச்சினை தொடர்ந்தும் இருப்பதாக விசேட வைத்தியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி வகையையும் மாகாண ரீதியில் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக, உலக முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றம் இடம்பெறுவது பொருத்தமானதாகும்.

உலகின் ஏனைய நாடுகள் டெல்டா திரிபுக்கு எதிரான தடுப்பூசிகளை தெரிவுசெய்து பெறும்போது, நாம் அதனைக் கருத்திற்கொள்ளாது, டெல்டா திரிபு தொடர்பான தரவுகளின்றி, தடுப்பூசிக்கு அவசரமாக அனுமதி வழங்குவது தொடர்பில் பிரச்சினை உள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.