ரஞ்சனுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை!

166 0

தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன், வைத்தியசாலையின் உடற்பயிற்சி பிரிவில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் சிகிச்சை பெற்றுக்கொண்ட பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்

மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியதோடு, அவரை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நியமித்ததைப் போலவே, ரஞ்சன்க்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்கவின் வருகைக்காக வைத்தியசாலையில் காத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. திலீப் வெதஆராச்சி, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.