கறுப்பு ஜூலை நினைவு தினமான இன்று வெள்ளிக்கிழமை நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு ; யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஈழத்தமிழர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என குறிப்பிட்டு முன்னெடுக்கப்பட்ட குறித்த ; போராட்டத்தில், ஆயிரத்து 983 கறுப்பு யூலை தமிழினப் படுகைலையானது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு அரங்கேற்றட்டது, வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் அத்தோடு நாடு முழுவதும் படுகொலை செய்யட்ட தமிழர்களையும் நினைவுகூருகிறோம் மற்றும் ஆயிரத்து 948 முதல் இன்று வரை நடைபெற்ற நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

