கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் அதி உயர் பீடத்தில் உள்ள உறுப்பினர்கள் நேற்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.
இதன்போது,வட கிழக்கு மாகாணங்களில் அரச திணைக்களங்களில் ஆளணி நீண்ட காலமாக நிரப்பப்படாது இருப்பது தொடர்பில் அவரிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது. அதனை வலியுறுத்தி கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்திருந்தோம்.
அதனடிப்படையில் வட கிழக்கில் அரச திணைக்களங்களிலே வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருக்கின்றது. அங்கு காணப்படும் வெற்றிடங்களிற்கு எவ்வளவு கூடிய விரைவில் நிரப்புமாறு கோரியிருந்தோம்
அந்த வகையில் வடக்கு மகாணத்தில் கல்விசாரா ஊழியர்கள் வருடமாக 2013ம் ஆண்டு நியமனம் வழங்கியிருந்தார்கள். கல்வி திணைக்களத்தினால் 8 வருடங்களாக அவர்களிற்கான பதவி உறுதிப்படுத்தப்படவில்லை.
8ம் ஆண்டு கல்வி தகைமையுடன் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் சாதாரண தர சான்றிதழ்கள் கோரியுள்ளமையால் சிலருக்கு பணிநிலை உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை. அதனையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
நீண்ட காலமாக பணிபுரியும் அவர்களிற்கே குறித்த பணிநிலை வழங்கப்பட வேண்டும். அதற்கு கல்வி தராதரம் பார்க்காது அவர்களுக்கு பதவி உயர்வினை வழங்க வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

