கறுப்பு யூலையினை முன்னிட்டு வவுனியாவில் போராட்டம்!

300 0

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதக அரசே படுகொலை அரசே தண்டிக்கப்படுவாய், நீதி ஒருநாள் தலைநிமிரும்,கொலைகார்கள் தண்டிக்கப்பட வேண்டும், சுயநிர்ணய உரிமை தமிழர்களிற்கும் உண்டு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் முக்கியஸ்தர்களான சிவகயன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.